அத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை - புது வெள்ளம்
அத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை பொன்னியின் செல்வன் முதல் பாகம் - புது வெள்ளம் கதை சொல்றது உங்க ரெஜியா ... குடந்தை நகரிலிருந்து தஞ்சாவூர் செல்வோர் அந்தக் காலத்தில் அரிசலாற்றங்கரையோடாவது காவேரிக் கரையின் மேலாவது சென்று, திருவையாற்றை அடைவார்கள். அங்கிருந்து தெற்கே திரும்பித் தஞ்சாவூர் போவார்கள். வழியிலுள்ள குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாறு, வடவாறு நதிகளைத் தாண்ட அங்கே தான் வசதியான துறைகள் இருந்தன...