அத்தியாயம் 10 - குடந்தை சோதிடர் - புது வெள்ளம்
பொன்னியின் செல்வன் முதல் பாகம் - புது வெள்ளம் அத்தியாயம் 10 - குடந்தை சோதிடர் - கதை சொல்றது உங்க ரெஜியா .. மணிப்பூ ஆடை அதுபோர்த்துக் கருங்கயற்கண் விழித்து ஒல்கி நடந்தாய் வாழி! காவேரி! கருங்கயற்கண் விழித்து ஒல்கி நடந்த எல்லாம் நின்கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி! காவேரி! பூவர் சோலை மயிலாடப் புரிந்து குயில்கள் இசைபாடக் காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி! காவேரி! காமர் மாலை அருகசைய நடந்த வெல்லாம், நின் கணவன் நாம வேலின் திறங்கண்டே அறிந்தேன் வாழி! காவேரி!