Ep 9 Saudi Arabia: A green city created in the desert - what's going on there?
இருண்டு போன கடற்கரை ஒளிர்கிறது. பாலைவனத்தில் நடப்படும் கோடிக்கணக்கான மரங்கள். ஓடும் ரயில்கள். ஒரு செயற்கை நிலா. கார் மற்றும் கார்பன் வாயு இல்லாத நகரம். நூறு மைல் பரப்பளவில் பாலைவனத்தில் உருவாக்கப்படும் மாநகரம். இதுதான் நியோம். பாலைவன சவுதி அரேபியா, பசுமையோடு உருவாக்க இருக்கும் சூழலியல் நகரம். எல்லாம் சரி, இது உண்மையிலேயே நிறைவேற முடியுமா?சவுதி அரேபியாவின் விஷன் 2030 திட்டத்தின் ஒரு பகுதியான இந்த நியோம் நகரத்திற்கான உத்தேசச் செலவு திட்டம் 500 பில்லியன் டாலர். 26,500 சதுர கிமீ பரப்பளவை உள்ளடக்கிய நியோம் நகரம், குவைத் அல்லது இஸ்ரேல் நாடுகளை விடப் பெரியது. மேலும் இது சவுதி நீதித்துறையின் கீழ் வராத தன்னாட்சி பெற்ற அமைப்பால் நிர்வகிக்கப்படும் என்று கூறப்படுகிறது.