Ep 8 The Last Mughal : Bahadur Shah Jafar II The tragic end of the last heir of the Mughal emperor
கடைசி முகலாய பேரரசர் குறித்த நினைவுகள், கால ஓட்டத்தில் அனைவரது மனங்களிலிருந்தும் மறைந்துவிட்டது. அனைவரும் அவரை மறந்து போய் இருந்தனர். ஆனால், இப்போது மீண்டும் அவரது நினைவுகள் உயிர்த்தெழுந்து இருக்கிறது. அவரது நினைவுகளை மட்டுமல்ல, அவரது பாரம்பரியத்தை நினைவுக் கூற தொடங்கி இருக்கிறார்கள். அதற்கு காரணம் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட அவரது கல்லறை.கடைசி முகலாய பேரரசராக இருந்த பகதூர் ஷா ஜாஃபர் II ஒரு அரசராக மட்டும் இருக்கவில்லை. அவர் சூஃபி ஞானி, ஒரு சிறந்த உருது கவிஞர்.