பழைய ஆட்களை ஒன்றுதிரட்டும் பன்னீர்செல்வம்
* 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் பாஜக பிரமுகர் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.* பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்* எடப்பாடி பழனிசாமியை வைத்து அதிமுகவை காப்பாற்ற முடியாது. அவரிடம் தாய்மை உள்ளம் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையை மக்கள் நிராகரிக்கிறார்கள். தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை வைத்து இயக்கத்தை சீரழிக்கக் கூடாது. முதலில் கட்சியை சரி செய்துவிட்டு, பிறகு மக்கள் ஆதரவை பெற வேண்டும். அதிமுகவில் தற்போது தலைமை சரியில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமை தொடர்ந்தால் அதிமுக அழிவை தடுக்க முடியாது. அதிமுகவை மீட்க யார் முன் வந்தாலும் என் முழு ஆதரவை தருவேன். டிடிவி தினகரன் அதிமுகவுடன் இணக்கமாக செயல்பட விரும்புகிறார். சசிகலா சட்டரீதியில் அதிமுகவை மீட்க போராடுகிறார். ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவின் நோக்கம் ஒன்றாக உள்ளது. அதிமுகவை மீட்க போராடுகின்றனர். - பண்ருட்டி ராமச்சந்திரன்* உ.பி தலித் சிறுமிகள் படுகொலை. உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் லால்பூர் மஜ்ரா தமோலி பூர்வா கிராமத்தில் வயல் பரப்பில் உள்ள ஒரு மரத்தில் 2 தலித் சிறுமிகள் தூக்கில் பிணமாக கிடப்பதாக நிகாசன் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.* அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில், தகுந்த நேரம் வரும்போது செல்வேன் என சசிகலா கூறினார்-Solratha solittom