எடப்பாடிக்கு வெற்றி - என்ன செய்யப்போகிறார் ஓ.பி.எஸ்? Solratha Solittom

அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்* இருவரும் இணைந்து செயல்பட முடியாத நிலையில் இருவரையும் சேர்ந்து கூட்டத்தை கூட்ட வேண்டும் என உத்தரவிட முடியாது.* ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலியாகிவிட்டதா என்பது பிரதான வழக்கில் தான் முடிவு எடுக்க முடியும்.* இரு தலைவர்களும் இணைந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்ற உத்தரவு கட்சி செயல்பாட்டை முடக்கிவிடும்* பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை பழனிசாமி விட்டுக்கொடுத்தார்.* ஜூன் 23 பொதுக்குழு தீர்மானத்தை எதிர்க்காத நிலையில் 23க்கு முந்தையே நிலை தொடர வேண்டும் என எப்படி உத்தரவிட முடியும்.* ஜூலை 11 பொதுக்குழுவை தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டியதில் தவறில்லை.*உட்கட்சி விவகாரங்களில் சிவில் வழக்கு தொடர முடியாது என்று கூற முடியாது.* ஜூலை 11 பொதுக்குழுவை ஜூன் 23ல் அறிவித்ததை முறையான நோட்டீசாக எடுத்து கொள்ள வேண்டும்* பன்னீர்செல்வம், பழனிசாமி சேர்ந்து செயல்படுங்கள் என தனி நீதிபதி உத்தரவிட்டது தவறு* அதிமுக விதிகளின்படி பொதுக்குழுதான் உச்சபட்ச அதிகாரம் பெற்றது.* 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுவரை 6 ஆண்டுகளுக்கான சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.* "இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது" - எடப்படி பழனிசாமிஉண்மை உறங்கும் நேரம், பொய்மை இறக்கை கட்டி வாயு வேகத்தில் உலாவரும் என்று சொல்லுவார்கள். நம்மையெல்லாம் ஆளாக்கிய கழக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.; நம்மையெல்லாம் வாழவைத்த இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களையும், தீய சக்தி, விடியா திமுக அரசின் அராஜகத்தில் இருந்து தமிழக மக்களையும் காக்கும் அறப்போரில் முழுமனதோடு ஈடுபட்டு வருகிறோம்.* அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் குறித்து விசாரணையை துவக்கியுள்ள, சி.பி.சி.ஐ.டி., போலீசார், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு 'சம்மன்' அனுப்ப முடிவு செய்துள்ளனர்.* ஆம் ஆத்மி மட்டுமே பா.ஜ.க.வுக்கு மாற்று - கெஜ்ரிவால்* தி.மு.க கூட்டணியில் இருப்பதால் காங்கிரசுக்கு முழுச்சுதந்திரமில்லை - கார்த்தி சிதம்பரம்* பா.ஜ.க எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் புனிதமானவர்களா? அவர்கள் வீட்டில் ஏன் சோதனை நடைபெறுவதில்லை? - தேஜஸ்வி யாதவ்* ஒற்றைத்தலைமை இபிஎஸ் தான் என ஏற்றுக்கொண்டால் ஓபிஎஸ்சை அதிமுகவில் இணைத்துக்கொள்வோம்: கடம்பூர் ராஜு

2356 232