பி.டி.ஆரை அநாகரிகமாக விமர்சிக்கலாமா அண்ணாமலை? Solratha Solittom
* கேரள சட்டப்பேரவையில் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. துணை வேந்தர்கள் நியமன நடைமுறையில் கவர்னரின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் மசோதாவில் முன்மொழியப்பட்டு இருந்தது.பல்கலைக்கழகங்களின் வேந்தராக கவர்னரின் அதிகாரத்தைக் குறைக்கும் இந்த மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. ஆளுங்கட்சியின் பொம்மைகளை துணை வேந்தர்களாக்க இந்த மசோதா வழிசெய்யும் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.* தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் ஆகியோருடன் சேர்ந்து விமான பயணி ஒருவர் எடுத்துக்கொண்டார். எதிரும், புதிருமான இரண்டு அரசியல் கட்சி தலைவர்கள் ஒன்றாக விமானத்தில் பயணித்தனர். இதை கண்ட விமானப் பயணி ஒருவர் இருவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பியுள்ளார். அவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அண்ணாமலை மற்றும் காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.* காஷ்மீரில் குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக இளைஞர் காங்கிரசார் உள்பட 36 தலைவர்கள் பதவி விலகி கட்சிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளனர்.* 'எங்கள் இலக்கு தமிழ்நாடு தான்' - வைரலாகும் இளையராஜா-ஏ.ஆர்.ரகுமான் - வீடியோ* விவசாயத்தை பாதிக்காமல் 8 வழிச்சாலை திட்டத்தை வேண்டுமானால் கொண்டு வாருங்கள். விவசாயத்தை அழித்து தான் கொண்டு வருவோம் என்றால் அதை நிச்சயமாக நாங்கள் எதிர்ப்போம் என்று பனமரத்துப்பட்டியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி கூறினார்.* அறநிலையத்துறை சார்பில் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து - திமுக எம்.பி கடும் எதிர்ப்பு* குலாம் நபி ஆசாத்தை விரைவில் சந்தித்து பேசுவேன்: ஜி.கே.வாசன்* மணிஷ் சிசோடியா வீட்டில் நடந்த ரெய்டால், குஜராத்தில் ஆம் ஆத்மியின் ஓட்டு வங்கி 4 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் , டில்லி முதல்வருமான கெஜ்ரிவால் கூறியுள்ளார்.* தியாகராஜன் பற்றி அண்ணாமலை பேசியது அநாகரீகம்: சீமான்-Podcast channel manager- prabhu venkat