அவசர பணத்தேவைக்கு முதலீட்டை விற்பது vs அடமானம் வைப்பது; எது லாபம்? | The Salary Account - 19
அவசரச் செலவுகள் என ஏதேனும் வந்தாலே நம் மனம் இரண்டை நோக்கித்தான் திரும்பும். ஒன்று கடன்; இன்னொன்று நம் முதலீடுகள். இதில் முதலாவதில்கூட தேவையைப் பொறுத்து எளிதில் முடிவெடுத்துவிடலாம். இரண்டாவதில்தான் நிறைய சிக்கல்கள் வரும். தங்கம், சொத்து, ஃபிக்ஸட் டெபாசிட், பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள் என ஒவ்வொரு முதலீட்டிற்கும், இதை இப்போது விற்கலாமா அல்லது அடமானம் மட்டும் வைக்கலாமா எனக் குழப்பம் ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலைகளில்,- எப்போது விற்க வேண்டும்,- எப்போது அடமானம் வைக்க வேண்டும்,- யாருக்கு எது லாபகரமாக இருக்கும்என்பது குறித்தெல்லாம்தான் இன்றைய The Salary Account எபிசோடில் பார்க்கப்போகிறோம். இதுகுறித்து வழிகாட்டவிருப்பவர் Aismoney தளத்தின் சிவகாசி மணிகண்டன்.Credits:Voice :N.Radhika |Sound Engineer : R. Navin Bala |Podcast Channel Executive : Prabhu Venkat. P |Podcast Network Head : Niyas Ahamed. M.