The Salary Account Chapter 2
ஒவ்வோர் ஆண்டும் சம்பள தாரர்கள் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்று, அலுவலகத்தில் TDS வொர்க்ஷீட்டை சமர்ப்பிப்பது. பெரும்பாலான அலுவலகங்களில் இம்மாதமே TDS form-க்கான தகவல்களை சரிபார்க்கவும், அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கவும் உங்களுக்கு மின்னஞ்சல்கள் வந்திருக்கும். அதில் வருமான வரியை Nil-லாக மாற்ற முயல்பவர்களில் நீங்களும் ஒருவரா? சரியான முதலீடுகள் மற்றும் வரிச்சலுகைகள் வழியாக வரியைக் குறைக்க நினைக்கிறீர்களா? இந்த வார The Salary Account உங்களுக்காகத்தான்.