தோனி, கோலியை மட்டும் ஏன் கொண்டாடுகிறீர்கள்... பேட்டர்னிட்டி என்பது ஆண்களுக்கு மட்டும் சாய்ஸா?! - அவளின் குரல் - 06
ஆண்கள் தங்கள் குழந்தை மகப்பேறின்போது உடன் இல்லையென்றாலும் கொண்டாடப்படுகிறார்கள், உடன் இருந்தாலும் போற்றப்படுகிறார்கள். அது அவர்களுக்கு ஒரு சாய்ஸாக இருக்கிறது. பெண்களுக்கு இறக்கி வைக்க முடியாத சுமையாக இருக்கும் குழந்தை கடமைகளில் கிடைப்பதெல்லாம் மனஉளைச்சலும் குற்றவுணர்வும்தான். `இப்படியெல்லாம் தியாக உருவாக இருப்பவள்தான் சிறந்த அம்மா, அது தன்னிகரில்லாத ஓர் உன்னத உணர்வு' என்று தாய்மையை ரொமான்ட்டிசைஸ் செய்வதை நிறுத்தி, அப்பாக்களின் கைகளும் குழந்தைகளின் டயப்பரை சுத்தம் செய்யலாம் என்று தந்தைமையை செயலுக்குக் கொண்டுவருவது எப்போது?